Sunday, March 13, 2011

அணு உலைகள் பாதிப்பால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம்! ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

ஜப்பான் பூகம்பம், சுனாமியால் அணு உலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன அங்குள்ள புகுசிமா மாவட்டத்தில் 5 இடங்களில் அணு உலைகள் இருந்தன.

இந்த 5 அணு உலைகளுமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு அணு உலையில் அதிக அளவில் கடல் நீர் புகுந்து விட்டது.

இதனால் அணு உலை குளிர்படுத்தும் அமைப்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதில் இருந்து அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 3000 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டு உள்ளனர்.

அதே போல மற்ற அணு உலைகளிலும் கசிவு ஏற்படலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு உள்ளது.

அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 5 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் பெரிய அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.