Saturday, March 19, 2011

சர்வதேச மன்னிப்புச் சபையுடன் சமரசத்துக்காக முழந்தாளிட்டு நிற்கும் இலங்கை அரசு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வரும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடன் சமரசம் செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக கொண்டுள்ள கரிசனைகள் தொடர்பாக கலந்துரையாட வருமாறு அரசாங்கம் அனைத்துலக மன்னிப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் மக் டொனால்ட்டுக்கு இதுதொடர்பான அழைப்பை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அனுப்பியுள்ளார்.

நல்லிணக்கம், மீள்கட்டுமானம், காயங்களைக் குணப்படுத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையாக உள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கை மீது மேற்கொள்கின்ற விமர்சனங்கள் இந்த உடனடித் தேவைகளை வலுவற்றதாக்கி விடும் என்றே நான் கருதுகிறேன். அமைதியை உருவாக்க இலங்கையைச் சேர்ந்தவர்களும், அனைத்துலக மன்னிப்புச் சபையும் நீண்டகால இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

அதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அமைதியை நிலைநிறுத்தவே இந்தஆணைக்குழு உருவாக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க அனைத்துலக மன்னிப்புச் சபை முன்வர வேண்டும்� என்றும் ஜாலிய விக்கிரமசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை கோரி வருகிறது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு அமெரிக்க வெளிவிவகாரச் செயலருக்கு மனுக்களை அனுப்பும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.