Saturday, March 19, 2011

தலைவர் பிரபாகரன் கொல்லப்படாரா? சந்தேகம் எழுப்பும் இலங்கைப் பிரதமர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்தாரா இல்லையா? அல்லது அப்படி இருந்திருந்திருந்தால் கொல்லப்பட்டது உண்மையில் அவர்தானா என்பவை குறித்து எல்லாம் தனக்கு எதுவுமே தெரியாது. கேள்விப்பட்டதையே சொல்கிறேன்.. என இலங்கையின் பிரதமர் தி.மு ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் எனக் கூறுகிறார்கள். தற்போது அவர் கொல்லப்பட்டு விட்டார் எனவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தினையும் யார் கண்டது? என்னைப் பொறுத்த வரையில் இவையெல்லாம் கேள்விப்பட்ட விடயங்களே தவிர நான் எதனையும் நேரடியாகக் காணவில்லை..

இதுபோன்றுதான் என்னால் தெரிவிக்கப்பட்ட தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பான தகவலுமாகும்.

பத்திரிகைகளில் வந்ததனையும் யாரோ சொன்னதையுமே தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.