Saturday, March 19, 2011

மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம்

தேர்தலில் வெற்றிபெற்றாலும் தொடர்ந்தும் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த நாட்டு மக்களுக்குத் தமது நன்றியையும் கெளரவத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ள ஜனாதிபதி, இது வரை காலமும் மக்கள் எதிர் பார்ப்பை நிறைவேற்றியது போன்று தொடர்ந்தும் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் வெற்றி குறித்து மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி;

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திற்கமைய �வளமான கிராமம் நிறைவான நாடு� என்ற தொனிப் பொருளின் கீழ் நாம் மேற்கொள்கின்ற நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த அமோக வெற்றி மேலும் உறுதிப்படுத் துகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டு முதல் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டம் மீது நம்பிக்கை வைத்த சகல மக்களுக்கும் இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை சிறப்பாக நடத்த முன்னின்று உழைத்த சகல அரசியல் கட்சிகள், வேட்பாள ர்கள் சுதந்திரமும் அமைதியுமான தேர்தலை நடாத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் திணைக்கள உத்தியோக த்தர்கள் சகல அரச அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.