நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் பல்வேறு சிரமங்களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரைகுறை மீள்குடியேற்றம், அதனைத் தொடர்ந்து பெய்த அடைமழை, அந்த மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம்; தொடர்ந்து மீண்டும் ஒரு இடப்பெயர்வு, பயிர்ச் சேதம், திரும்பவும் கையேந்த வேண்டிய சூழல் அதனால் ஏற்பட்ட அவமானம் இப்படி எமது தன்மானத்திற்கு விடப்பட்ட பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துக் கொண்டே இந்தத் தேர்தலையும் நாம் சந்தித்தோம்.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற செய்தியைச் சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சொல்லியிருந்தீர்கள். அதனைப் போன்றே தமிழ்த் தலைமைகள் பிரிந்துநின்று எதனையும் சாதிக்க முடியாது.
ஒருகுடையின்கீழ் அணிதிரள்வதின் மூலமே ஒருமித்த குரலில் எமது உரிமைக்கான குரலை எழுப்ப முடியும் என்பதையும் உங்களது செய்தியாகச் சொல்லியிருந்தீர்கள்.
எமது மக்கள் விரும்பியவாறு இயன்றவரை அனைத்துக் கட்சிகளையும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரணியில் அணிதிரட்டி, 2011 உள்ளுராட்சித் தேர்தலில் களம் இறங்கினோம். அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளீர்கள். எமது பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளீர்கள். நன்றி.
நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாகவும் இதயசுத்தியுடனும் இருக்க வேண்டும் என்பதை உங்களது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் எடுத்தியம்பியுள்ளீர்கள். அந்தக் கடமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவ்வனே செய்யும். அரசாங்கமும் எமது மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கும் என்றே நம்புகின்றோம். சர்வதேச சமூகமும் எமது மக்களின் அபிலாசைகளை நன்கு விளங்கிக்கொண்டிருக்கும் என்று நம்புகின்றோம்.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக சபைகளைக் கைப்பற்றி தமிழ் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இனியும் சந்தர்ப்பவாத அரசியல் எம்மக்களிடம் எடுபடாது என்பதை ஏனைய அரசியல் சக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கில் மட்டும் போட்டியிட்டு, அதிக சபைகளைக் கைப்பற்றி, அகில இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகிறது என்பதை நாம் பெருமையுடன் பறைசாற்றுகின்றோம்.
மீள்குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை மேற்கொள்வதற்கே அச்சமடைந்திருந்தனர்.
அவர்களின் பின்னால் நிழலாகத் திரிந்த பாதுகாப்புத் தரப்பினர், கூட்டம் நடைபெறுகையில் அந்த இடத்தை முற்றுகையிடுவது போன்ற செயற்பாடுகள் எமது மக்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைத்தது. இவை அனைத்தையும் பொருட்படுத்தாது தமது பொறுப்பை உணர்ந்து துணிச்சலுடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அனைத்து அன்பு நெஞ்சங்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஊடகத்துறையின் பங்களிப்பை இத்தேர்தலில் நாம் மறக்க முடியாது. அவர்களுக்கு நாம் தனியே நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். மிகவும் பொறுப்புடனும், எமது நியாயங்களை வெளியில் எடுத்துச் சொல்வதிலும், அரசாங்கத்தின் அச்சு ஊடகம் தனது தரப்பினை மட்டும் நியாயப்படுத்துகையில் தனியார் அச்சு ஊடகங்கள் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் அதற்கும் ஒரு படி மேலாக அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நியாயத்தை பக்கசார்பின்றி எடுத்துரைத்திருந்தது.
இணையதளங்கள் தங்களது பங்களிப்பைச் செவ்வனே செய்திருந்தன. பிரச்சாரக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிட்டு புலம்பெயர் உறவுகள் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும் தாயகத்தில் தமது உறவுகளுக்கு அரசியல் தெளிவூட்டுவதற்கும் உதவி புரிந்தன. வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சோர்ந்துவிடாமல் அவர்களுக்குப் புத்துயிர் அளித்தன.
உங்களுக்கு நன்றிகள் என்ற வார்த்தை மட்டும் போதாது. உங்களது எண்ணப்படி நாங்கள் சபைகளை நடத்தி அபிவிருத்திப் பணிகளையும் அரசியல் தீர்விற்கான நகர்வுகளையும் இணையாகச் செயற்படுத்துவதே உண்மையான நன்றிக்கடனாக இருக்கும்.
மக்கள் சேவையில்
ந.சிவசக்தி ஆனந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.