Sunday, March 20, 2011

கிறிஸ்மஸ்தீவு அகதிகள் தமது முகாமிற்கு தீவைத்தனராம்!

கிறிஸ்மஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்களில் சிலர் நேற்று இரவு முகாம் கட்டடத்திற்கு தீவைத்தனர் என்றும் இதனால் அந்தக் கட்டடத்திற்கு ஆயிரக்கணக்கான டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆஸி. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிறீஸ்மஸ்தீவு முகாம் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்கள அதிகாரி சண்டிலொகான் தெரிவித்துள்ளார்.

பொல்லுகள், தீவைக்கும் உபகரணங்களுடன் வந்த 250 பேர் கொண்ட குழு ஒன்று பொலிஸாருடன் கடும் மோதல்களில் ஈடுபட்டது எனவும் ஆஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குழுவினர் ஆள் அடையாளம் தெரியாத வகையில் முகமூடி அணிந்திருந்தனர் எனவும் பின்னர் பொலிஸாருடன் நடந்த மோதலில் அகதிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தடுப்பு முகாமைப் பராமரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் ஆறு தங்குமிட கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன என்றும் இவற்றில் தங்கியிருந்த 1800 பேரில் 300 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.