புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பாகிவந்த கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து அரசசார்பு தனியார் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி செயற்பட ஆரம்பித்திருக்கின்றது.
போர் மூலம் கொக்காவில்ப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர், 270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் அரசினால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெலபிட்ட உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
172 மீற்றர் நீளமான கொக்காவில் தொலைதொடர்பு கோபுரம் இலங்கையின் மிக உயரமான தொலைதொடர்பு கோபுரமாகக் கருதப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அதிரடித்தாக்குதலில் கொக்காவில் முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது கொல்லப்பட்ட சிங்க றெஜிமென்டை சேர்ந்த 55 சிறீலங்கா இராணுவத்தினருக்கான நினைவு மண்டபத்தை சிறீலங்கா படையினர் 2011 பெப்ரவரி 21ஆம் திகதி திறந்துவைத்திருந்தனர்.
கொக்காவில் ஒலிபரப்பு நிலையத்திற்கு முன்பாக குறித்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கொக்காவில் ஒலி, ஒளிபரப்புக் கோபுரத்தில் இருந்து அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்டு வருகின்ற வசந்தம் தொலைக்காட்சி நேற்று முதல் ஒளிபரப்பாக ஆரம்பித்திருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்காவில் பகுதியில் இருந்து 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையில் ஒலிபரப்பாகிய புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம் மீது விமானப்படையினர் பல்வேறு தடைவைகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதேவேளை கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் புலிகளின்குரல் வானொலி நிலையத்தின் நடுவப்பணியகத்தில் தற்போது இராணுவத்தினரின் பாரிய படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.