Sunday, March 20, 2011

லிபியா மீதான தாக்குதலை தொடங்கிது பிரான்ஸ்!

லிபிய வான்பரப்பில் பறந்து இராணுவ வாகனமொன்றின்மீது பிரெஞ்சு போர் விமானமொன்று கடந்த இரவு (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தியரி புர்கார்ட் தெரிவித்தார்.

ஜி.எம்.ரி.நேரப்படி 16.45 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10.15 மணி) இத்தாக்குதல் இடம்பெற்றதாக அவர்கூறினார்.

லிபியாவில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தும் சர்வதேச நாடுகளின் நடவடிக்கையில் முதலாவதாக இடம்பெற்ற தாக்குதல் இதுவாகும்.

இராணுவ வாகனமொன்றே இலக்கு வைக்கப்பட்டதாக புர்கார்ட் கூறினார். எனினும் எந்த வகையான வாகனம் என அவர் கூறவில்லை.

விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் லிபிய வான் பரப்பில் சுமார் 20 யுத்த விமானங்கள் பறந்துவருவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.