செக் குடியரசுக்கு விஜயம் செய்துள்ள ஜி.எல் பீரிஸ், விடுதலைப் புலிகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. செக் குடியரசின் பாதுகாப்புச் அமைச்சரைச் சந்தித்தவேளையே பீரிஸ் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
ஐரோப்பாவில் உள்ள விடுதலைப் புலிகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களால் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். செக் குடியரசானது முன்னர் பல ஆயுதங்களை, மறைமுகமாக சில விடுதலை அமைப்புகளுக்கு கொடுத்துவந்தது என்பது யாவரும் அறிந்த விடையம். புலிகளின் மீள் வருகைக்கு ஆயுதங்களை செக் நாடு வழங்கலாம் அதனைத் தடுக்க பீரிஸ் அந் நாட்டு அமைச்சரோடு பேசியதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இலங்கையானது, ஐரோப்பாவில் தனது நடவடிக்கைகளை விஸ்தரிக்க இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியோடு சில புலிகளின் செயல்பாட்டாளர்களையும், மற்றும் தலைவர்களையும் கைதுசெய்வது குறித்தே இலங்கை முஸ்தீப்புக் காட்டிவருவதாக அறியப்படுகிறது. இதன் ஒரு அங்கமாகவே அது சில நாடுகளை அணுகியுள்ளதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் பரவலாக பல நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பாரிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிர்வு இணையம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.