Sunday, March 27, 2011

நாடு திரும்புகிறார் சம்பந்தன்! பதவி ஏற்பு நிகழ்விற்கு தலைமை தாங்குவார்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் தலைமையில் நடைபெறும் நிகழ்விலேயே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த சத்தியப் பிராமணம் செய்து கொள்ளும் வைபவம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந் நிலையில், சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் எதிர்வரும் நான்காம் திகதி நாடு திரும்பியதும் அவரது தலைமையில் இந்த வைபவம் நடைபெறும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் திணைக்களத்தின் அறிவித்தலின்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையில் பிரதேச சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.