பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் அளித்துவரும் ஒத்துழைப்புக்களும், உதவிகளும் உயர்வானவை என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல் மறுசீரமைப்புக்கான வாக்களிப்பு திட்டம் தொடர்பில் பிரித்தானியா தமிழ் கொன்சவேட்டிவ் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானவை. சிறீலங்காவில் இறுதியான அமைதி காணப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நியாயமான வாக்களிப்பு முறைக்கு நீங்கள் தரும் ஆதரவுகளுக்கு நன்றி. பிரித்தானியா தமிழர் கொன்சவேட்டிவ் கட்சி எமக்கு தரும் ஆதரவுகள் மிகவும் முக்கியமானவை. அது எமக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. சிறீலங்காவில் ஒரு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதே தற்போது முதன்மையான செயலாகும்.
தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்கள் தொடர்பில் அதிக அக்கறைகள் காண்பிக்கவேண்டும் என நாம் சிறீலங்கா அரசை வலியுறுத்துவோம் என அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.