உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் அடிகளார் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலரும், சிறீலங்காவிற்கான முன்னாள் தூதுவருமான றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்துள்ளனர்.
அவர்கள் ஊடக அறிக்கை இணைப்பு:
சிறீலங்காவின் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக உலகச் சமூகத்தின் கவனக்குவிப்பை ஈர்க்கும் பொருட்டு உலகத் தமிழர் பேரவை (உ.த.பே) தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழர் பேரவையானது அமெரிக்கத் துணைச் செயலாளர் பிளேக்கைச் சந்தித்தது.
உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ. இமானுவேல் அடிகளாரின் (ஜேர்மனி) தலைமையில், அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலயஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் விலியம்ஸ் (அமெரிக்கா), சுரேன் சுரேந்திரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் பேராளர் குழுவில் பங்குபற்றினர்.
உலகத் தமிழர் பேராளர் குழுவானது தெற்கு மற்றும் நடு ஆசியாவுக்கான ஐக்கிய அமெரிக்காவின் துணை அரசுச் செயலாளர் மாண்புமிகு றொபேட் பிளேக் அவர்களை 2011 மார்ச் 28, திங்கட்கிழமை அன்று வாசிங்ரன் நகரில் அமைந்துள்ள அரச திணைக்களத்தில் சந்தித்தது. துணைச் செயலாளருக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையிலான இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது.
உலகத் தமிழர் பேரவையானது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய இன்னல்களைச் சுட்டிக் காட்டியது. தமிழ் மக்களின் முக்கிய குறைகள் பற்றியும் அவர்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தமிழர் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வந்த அண்மைய அறிக்கை பற்றியும் துணைச்செயலாளருடனும் அவரது குழுவினரோடும் கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.