லிபியா மீது விமானங்கள் பறப்பதற்கான வலையத்தை அமைப்பதற்கான அனுமதியை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
லிபியாவின் வான்படையினரின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்துடன், விமானங்கள் பறப்பதற்கான தடைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று (17) இடம்பெற்ற விவாதத்தின்போது பாதுகாப்புச்சபையின் 15 உறுப்பினர்களில் 10 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐந்து நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
லிபியாவில் எதிர்த்தரப்பினரால் கைப்பற்றப்பட்ட பல நகரங்களை லிபிய அதிபர் கேணல் கடாபியின் படைகள் மீண்டும் கைப்பற்றிவருவதை தொடர்ந்த இந்த தடையை மேற்குலகம் அவசரமாக கொண்டுவந்துள்ளது.
ஐ.நாவின் இந்த அறிவிப்பால் பென்காசி பகுதியில் உள்ள எதிர்த்தரப்பினர் பெரும் ஆரவாரத்தை மேற்கொண்டு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
நேற்றும் (17) அங்கு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது தாம் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக எதிர்த்தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
ஐ.நாவின் தீர்மானத்தை தொடர்ந்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆராய்ந்துள்ளார். படை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நாவின் இந்த தீர்மானத்தை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் லெபனான் ஆகியன முன்மொழிந்திருந்தன. ரஸ்யா, சீனா, இந்தியா, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.