விடுதலைப் புலிகள் அணிவது போன்ற தாலியை அணிந்திருந்ததாகக் கூறி கனேடிய குடிவரவு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட, �சன் சீ� கப்பலில் சென்ற அகதிப் பெண்ணை விடுதலை செய்யுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
�சன் சீ� கப்பலில் தனது குழுந்தைகளுடன் அகதியாக கனடாவுக்குச் சென்ற பெண் விடுதலைப் புலிகள் அணிவது போன்ற தாலி அணிந்துள்ளதால், அவர் மீது சந்தேகம் உள்ளதாக கனேடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம் என்பதால் அடைக்கலம் கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறியிருந்தனர்.
அத்துடன் இந்தப் பெண் பேணபேயில் உள்ள சிறைச்சாலையில் தனித்து அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பெண் கனேடிய சமஸ்டி நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறுத்தப்பட்ட போது அவரது சார்பில் முன்னிலையான சட்டவாளர், திருமண நாளில் கணவன் கட்டிய தாலியையே அவர் அணிந்திருப்பதாகவும் அதுகுறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.
ஆனால் கனேடிய குடிவரவு அதிகாரிகள் அவரை வெளியே விடுவது ஆபத்தானது என்று கூறினார்.
ஆயினும் அந்தப் பெண்ணை 1000 டொலர் பிணையில் விடுதலை செய்ய கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக இவரை கனேடிய நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.