கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் குடாநாட்டு மக்கள் இப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்துள்ளார்.
513 ஆம் படைப்பிவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் மானிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் படையினர் ஒன்று கூடல் நிகழ்வின் போது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிலையான சமாதானம் மலர்ந்துள்ளது. இது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசாகும். இதனை தொடர்ந்தும் பாதுகாப்பதே இராணுவத்தின் கடமையாகும். எதிர்காலத்தில் ஒரே நாடு ஒரே தேசிய மாக வாழவேண்டும் என்பதே எமது விருப்பம். மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வியையும் உயர்த்துவதே எமது நோக்கம்.
இன்று உங்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொருட்களை விட, 30 வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கிடைத்த சமாதானமே மக்களுக்கான மிகப்பெய பரிசாகும். இச்சமாதானத்தை அடைவதற்காக நாம் நிறைய விலை கொடுத்துள்ளோம். நிறைய இழந்திருக்கின்றோம்.அதனைப் பாதுகாப்பது அனைவரதும் கடமை. எதிர்காலத்தில் அனைவரும் ஒரு நாட்டில் ஒரே மக்களாகவும் ஒரே சமூகமாகவும் வாழவேண்டும் என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.