Saturday, March 19, 2011

மக்களை முட்டாள்கள் ஆக்கும் தினத்தைக் கொண்ட (April Fool) மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்மைப்புடன் மீண்டும் அரசு பேசுகிறதாம்

மக்களை முட்டாளாக்கும் தினத்தைக் கொண்ட மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்மைப்புடன் மீண்டும் இரங்கை அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 07ம் திகதி நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிகாரப் பரவலாக்கல், போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றிருந்தன.

அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியாக ஏப்ரல் -07ம் திகதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏப்ரலில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கிடையே அரசாங்கத்தின் நல்லெண்ண வெளிப்பாடாக எதிர்வரும் நாட்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் இன்னும் சிலர் விடுதலை செய்யப்படவும், மேலும் சிலா் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் அமைச்சரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.