வியாழக் கிழமை இரவில் இருந்த நிம்மதி, மறுநாள் காலையில் மொத்தமாக மாறிவிடும் என்று தி.மு.க தலைமை எதிர்பார்க்க வில்லை. சென்னையில் கலைஞரை குலாம்நபி ஆசாத் நேரில் சந்தித்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வியாழனன்று (மார்ச் 3) டெல்லியில் காங்கிரஸ் ஐவர்குழு குலாம் நபி ஆசாத்துடன் ஆலோசித்தது. அதன் பின், கலைஞரைத் தொடர்புகொண்ட ஆசாத், “57ன்னு காங்கிரசுக்கு நீங்க சொல்லியிருந்தீங்க.. 60 சீட்டுன்னா கூட்டணி முடிவாயிடும்’ என்று சொல்லி யிருக்கிறார். அதற்கு கலைஞர், “க்ளியரன்ஸ் வாங்கிட்டுத்தான் பேசுறீங்களா?’ என்று கேட்க… “60-ன்னா மேடம் ஓ.கே. பண்ணிடு வாங்க’ என்று சொல்லியிருக்கிறார் ஆசாத். கலைஞரும், “60 சீட் தர்றோம். நாளைக்கு வந்து ஒப்பந்தம் சைன் பண்ணிடுங்க. டயம் இல்லை’ என்று சொல்ல… ஆசாத்திட மிருந்து பாசிட்டிவ்வான பதில் வந்தது.
கலைஞருக்கு நிம்மதி. இழுத்துக் கொண்டே இருந்த விவகாரம் முடிவுக்கு வந்தது என்ற சந்தோஷத்தில் பேராசிரியர், ஆற்காட்டார், துரைமுருகன் எல்லோரிட மும், “இனி பிரச்சினையிருக்காது. தேர்தல் வேலைகளை வேகமா பார்க்கலாம். அலையன்ஸ் நல்லபடியா செட்டாயிடிச்சி’ என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். மனநிறைவோடு படுக்கச் சென்றவருக்கு மறுநாள் வந்த தகவல்கள் உற்சாகம் தருவதாக இல்லை.
வெள்ளி (மார்ச்-4) அன்று தன்னைத் தொடர்பு கொண்ட டி.ஆர்.பாலுவிடம் ஆசாத், “எங்க மேடம் 63 சீட் கேட்கிறாங்க. தொகுதிகளையும் நாங்கதான் முடிவு செய் வோம்’ என்று சொல்ல, டி.ஆர்.பாலு இத்தகவலை கலைஞ ரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். கலைஞரின் கோபம் அவரது முகத்திலேயே பளிச்சென வெளிப்பட்டிருக்கிறது.
இத்தனை காலமாக உழைத்ததால, இந்தக் கட்சிக்குத் தலைவரா தொண்டர்கள் என்னை உட்கார வச்சிருக்காங்க. எனக்கு இப்படியொரு அவமானமா? அவர்கள் கொண்டு வரும் லிஸ்ட்டில் நான் கையெழுத்துப் போடவேண்டுமா?’ என்று கேட்டதும், டி.ஆர்.பாலு ஷாக்காகிவிட்டார். உடனே பேராசிரியரைத் தொடர்புகொண்டு அழைத்த கலைஞர், டெல்லியின் நிபந்தனைகள் பற்றி விளக்க, பேராசிரியரும் கோபமாகிவிட்டார். நமக்கு இந்த இயக்கம்தான் முக்கியம். மக்களுக்கு நாம் எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கோம். அதற்குரிய மரியாதை நமக்கு கிடைக்கும். காங்கிரஸ் இனி வேண்டாம்’ என உரத்த குரலில் தனது அதிருப்தியை பேராசிரியர் பதிவு செய்ய… அருகிலிருந்த துரைமுருகனும், “காங்கிரஸ் இல்லாமலே நாம ஜெயிக்கலாம்ணே’ என்று சொல்லியிருக்கிறார். பொன்முடி யும் அங்கே இருந்திருக்கிறார். “காங்கிரசில் வேலை செய்ய ஆட்களே கிடையாது. பூத் கமிட்டிஉள்பட எல்லா வேலை யையும் நாமதான் பார்க்கணும்’ என்று தன் கருத்தைக் கூறி யிருக்கிறார். காங்கிரஸ் இல்லாமல் களத்தை எதிர்கொள்ள முடியும் என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்த, தி.மு.க நிர்வாகிகள் ஒத்த குரலாக உரத்த குரல் கொடுத்ததைக் கண்டு கலைஞர் உடனே அறிக்கை எழுதத் தயாரானார்.
வெள்ளி இரவு அவரிட மிருந்து பரபரப்பான அறிக்கை வெளியானது. காங்கிரசுக்கு 50 சீட்டில் தொடங்கி, 60 சீட் வரை ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் படிப்படியாக உயர்த்தியதையும், 60 சீட்டுக்கு ஒப்புக் கொண்டபின், 63 வேண்டும் என்பதும் அதையும் அவர்களே முடிவு செய்வார்கள் என்று நிபந்தனை விதிப்பதும் கூட்டணிக்கு ஏற்புடையதுதானா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்த கலைஞர், தி.மு.க தன்னுடைய நிலையை சனிக்கிழமையன்று நடைபெறும் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். கூட்டணிச் சிக்கல் குறித்து கலைஞர் முதன்முறையாக வெளிப்படுத்திய தால் நள்ளிரவிலும் அரசியல் வட்டாரம் பரபரப் பானது.
கலைஞரின் நிலைப்பாடு சரி என தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் ஆகியோர் ஆதரித்தனர். சனிக்கிழமையன்று அறிவாலயம் வந்தார் கலைஞர். கலைஞரின் கார் உள்ளே வந்ததுமே, “வேண்டாம்.. வேண்டாம்… காங்கிரஸ் வேண்டாம்’ என்று கட்சியினர் குரல் எழுப்பினர். என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை அறிய தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், குழுவின் உறுப் பினர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர். வரமுடியாமல் போன அந்த ஓர் உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. ஆலோசனைகள் தொடங்கியபோதே, காங்கிரசின் அணுகுமுறைகளுக்கு எதிரான மனநிலையே உறுப்பினர்களிடமிருந்து வெளிப்பட்டது. ஒரு கட்டத்தில் டி.ஆர்.பாலு குறுக்கிட்டு, “நாம் பொறுமையாக இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். அடுத்தகட்ட விளைவுகளாக என்னென்ன நடக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்றார். உடனே அழகிரி கோபமாகக் குறுக்கிட்டு, “உட்காரு.. என்ன பேசுற? மானம் மரியாதையை விட்டுட்டுப் போகணுமா? பயந்துட்டியா?’ என உரிமையோடு பேச, பாலுவும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளின்போது, தி.மு.கவின் பிடியை விட்டுக்கொடுக்காமல் என்னென்ன பேசினேன் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அப்போது கலைஞர், “இவ்வளவு ஓப்பனா அசிங்கப்படுத்தியிருக்காங்க’ என்று சொல்ல… தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுக்குப் பொறுப்பு வகிக்கும் நாகநாதன், “கட் சிக்கு சுயமரியாதைதான் முக்கியம். நாம் சுய மரியாதை இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்த வங்க. நாம மத்திய அரசிலிருந்து வெளியே வந்து காங்கிரசுக்கு பாடம் புகட்டி, அவங்க அகம்பாவத்தை அழிக்கணும்’ என்று தன் கருத்தை அழுத்தமாக எடுத்து வைத்திருக்கிறார்.
அப்போது மு.கண்ணப்பன், “”இப்போது எடுக்கும் இந்த முடிவை ஈழத்தமி ழர் பிரச்சினையின் போது எடுத்திருந் தால், இலங்கைத் தமிழர்களை காப்பாற்றாமல் விட்டுவிட்டோம் என்ற கறை நம்மீது விழாமல் இருந்திருக்கும். இப்போது எடுக்கும் முடிவால் அந்தக் கறை மறைய வாய்ப்புள்ளது” என்றார்.
அதற்குப் பதில் சொன்ன கலைஞர், “”இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை நம்முடைய மாநில அரசின் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. மத்திய அரசு அதனை சர்வ தேசப் பிரச்சினையாகக் கருதி அணுகிக்கொண் டிருந்தது. ஒரு மாநில அரசால் எந்தளவுக்கு முடியுமோ, அவ்வளவு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டுதான் இருந்தோம். அதோடு, இப்போதைய முடிவை அப்போதே எடுத்திருந்தால் கடந்த ஒன்றரை ஆண்டில் தமிழ்நாட்டில் நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போயிருக்கும்” என்றார்.அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி போன்றவர்கள் காங்கிரஸ் வேண்டும் என்ற கருத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். பிறகு, முக்கிய முடிவு எடுக்கும் கட்டத்திற்கு வந்தது தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு.
தொகுதிப் பங்கீட்டில் சிக்கலை ஏற் படுத்தியதன் மூலம், இந்தக் கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, மத்திய அரசில் இடம்பெற் றுள்ள தி.மு.க அமைச்சர்கள் பதவி விலகுவ தென்று தீர்மானம் வடிவமைக்கப்பட்டது. அப்போது கலைஞர், “நீங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் குழுவின் உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு, தீர்மானத் தை நிறைவேற்றினார். ஒட்டுமொத்த குழுவினரும் இத்தீர்மானத்தை கை தட்டி வரவேற்றனர். தீர்மானத்தையும் அதனை விளக்கும் அறிக்கையையும் எழுதிய கலைஞர் அதில் சோனியாவின் பெயரைக் குறிப்பிடும்போது, தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியுடன் குறிப்பிடத் தவறவில்லை.
தீர்மான நகல்கள், பத்திரிகையாளர் களுக்கு அளிக்கப்பட, அந்த விவரம் அறி வாலயத்தில் திரண்டிருந்த தொண்டர்களுக் கும் தெரியவந்தது. அவர்களும் கைதட்டி வரவேற்று, உற்சாகக் குரல் எழுப்பினர். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இருப்பதால், வடமாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் தி.மு.க அணி பெருவாரியான வெற்றி பெறும் என்பது தி.மு.க தொண்டர்களின் நம்பிக்கை. எனினும், 60 தொகுதிகள் கொண்ட தென்மாவட்டங்களில் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு பலம் உள்ள கட்சி எதுவு மில்லை. காங்கிரசும் இல்லையென்றால் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று அறிவாலயத்திற்கு வந்திருந்த தென்மாவட்ட தி.மு.கவினரிடம் கேட்டோம்.
காங்கிரஸ் என்பது எங்களுக்கு கூடுதல் சுமைதான். அவர்களுக்குள்ள வாக்கு வங்கி என்பது குறைவு. அதை யும்கூட நாங்கள்தான் பாடுபட்டு வாக்குப் பதிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு கொடுக்கின்ற சீட்டுகளில் அ.தி.மு.க வேட்பாளரைக் களமிறக்கிவிடுவார் ஜெய லலிதா. கையை இலை எளிதாக ஜெயித்துவிடலாம் என்பது அவர்கள் கணக்கு. தொகுதிகளை காங்கிரசுக்குக் கொடுத்து, அ.தி.மு.கவை ஜெயிக்க வைப்பதைவிட, நாங்களே அ.தி.மு.கவை எதிர்த்துப் போட்டியிட்டு நீயா-நானா என்று பார்த்துவிடுவோம். காங்கிரஸ் இல்லாவிட்டால் நாங்கள் அதிக இடங்களில் போட்டி போட முடியும். எங்களை ஜெயிப்பது எளிதல்ல என்பது அ.தி.மு.க.வின ருக்குத் தெரியும். தென்மாவட்டத் தில் உள்ள 60 தொகுதிகளில் 15 தொகுதிகளில் தி.மு.கவில் செல் வாக்கு உள்ள வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாவிட்டாலும் கட்சி பலம், சொந்த பலம் ஆகியவற்றால் இவர்கள் நிச்சயமாக வெற்றி பெறு வார்கள். மீதம் இருப்பவை 45 தொகுதிகள். அங்கெல்லாம் ஏற்கனவே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்.
எங்களுடைய தேர்தல் நெட்வொர்க் என்பது எல்லாக் கட்சிகளையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அ.தி.மு.க தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுக்க ரெடியாக இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் களிடம் அதற்கான ஆட்கள் இல்லை. நாங்கள் வார்டு வார்டாக, வீடு வீடாக வாக்காளர்களுக்கும் கட்சிக்காரர் களுக்கும் பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆட்சியின் சாதனைகளைச் சொல்கிறோம். அதனால் ஒவ்வொரு குடும்பமும் அடைந்த பலன்களைச் சொல்கிறோம். இந்த 45 தொகுதிகளில் 15 முதல் 20 தொகுதிகளை எங்கள் தேர்தல் பணியால் நிச்சயம் ஜெயிப்போம். கலைஞர் தான் மீண்டும் முதல்வர்” என்றனர் நம்பிக்கையுடன்.
கட்சி ஒரு முடிவெடுக்கும்போது, அதனைச் செயல்படுத்தியாக வேண்டும் என்ற நம்பிக்கையும் வேகமும் உணர்ச்சிவசமிக்க ஒவ்வொரு தொண்டரிடமும் இருப்பது இயல்புதான். உணர்ச்சிவேகமும், நம்பிக்கையும் களத்தில் நேரடியாக சந்திக்கும் சோதனைகளின்போது நீடிக்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.