யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது முக்கிய விடயமாகும்.
யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எத்தனை உயிர்கள் பலியாகின என்பது தொடர்பான சரியான புள்ளி விபரங்களை வெளியிட முடியாத போதிலும், உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
25 ஆண்டு கால யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு மேலும் அதிகளவில் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகிறது.இலங்கையின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.