Wednesday, March 16, 2011

தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்

மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

கோலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய விஜயங்களை நாடு கடந்த அரசு தொடர்பாக மேற்கொண்ட போதே இந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் பிரதமர் பேசுகையில், நாடு கடந்த அரசின் உடணடியான பணிகளாக மூன்று முக்கிய பணிகளைக் குறிப்பிட்டார்.

1. இன அழிப்பு, மனித இனத்திற்கெதிரானக் குற்றங்கள்இ தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் போன்றவற்றை புரிந்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு கணிசமான பங்களிப்பு செய்வது.

2. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பறித்து மக்களை இடமாற்றம் செய்ய சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டுள்ள தீவிரமான செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

3. இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி சுதந்திர தமிழீழ நாடு அமைக்கப்படுவதுதான் என்ற அனைத்துலக உடன்பாட்டை உருவாக்குவதில் வெற்றி பெறுவது.
நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு “இந்தியாவின் நிலை” முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார். அவ்விசயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான் நாடு, கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது. மேலும்இ அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
“இது எங்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாகும்” என்றாரவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.