Friday, March 11, 2011

ஜப்பானை கடுமையாகத் தாக்கியுள்ள ஆழிப்பேரலை!

ஜப்பானில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஐ கடந்துள்ளதாக (வெள்ளிக்கிழமை மாலை) உத்தியோக பூர்வமாக

அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் மீட்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

8.9 மக்னிடியூட் அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்க அதிர்வினால், டோக்கியோவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 400 கி.மீ பரப்பளவுக்கு கடும் தேசம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால், கார்கள், கட்டிடங்கள், கப்பல்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

350 பேர் உயிரிழந்துள்ளதை ஜப்பான் அரசு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 500 ற்கு மேற்பட்டோரை இதுவரை காணவில்லை.

துறைமுக நகரமான மியாகியின் செண்டாய் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு 200 - 300 இடைப்பட்ட உடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

உலகின் ஐந்தாவது மிகப்பெறும் நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதுடன், நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பார்க்க 8,000 மடங்கு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் கடலில் உருவாகிய சுனாமி மணிக்கு 800 கி.மீ வேகத்தில் ஜெட் லைனர் வேகத்தில் தனது கோரத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும், வாஷிங்டன், ஒரேஜன் நகரங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதுடன், கடல் பிரதேசத்திற்கு அருகாமையிலிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு விரையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

எனினும் அங்கு இதுவரை ஏற்பட்ட தேசங்கள் தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
கலிபோர்னியாவின் க்ரெசெண்ட் நகரில், 2 மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளன.

ஜப்பானில் மியாகி (Miyagi), (Fukshima) புக்ஷிமா நகரங்களை சுனாமி கடுமையாக தாக்கியுள்ளது. சென்டேய்(Sendai) நகரின் அமைந்துள்ள ஜப்பானின் பிரதான விமான நிலையம் கடுமையான தேசத்திற்கு உள்ளாகியுள்ளது. விமான ஓடுபாதையில், கப்பல்களும், கார்களும் நீரினால் அடித்துச்செல்லப்படுவதை காண முடிந்துள்ளது.

மனியாமிசோமா, புக்ஷிமா நகரங்களில், 1,800 க்கு மேற்பட்ட வீடுகள் தேசமடைந்துள்ளன. டோக்கியோவில், பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஒரு இடத்தில் நில அதிர்வுகளின் தாக்கத்தால் கூரைகள் இடிந்துவீழவே 20 பேர் படுகாயமடடந்துள்ளனர்.

இன்ஷிஹாரா நகர், ஷிபா நகர் கெஸென்னுமா ஆகிய பிரதேசங்களில் சுனாமியினால் கட்டிடங்கள், வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

எனினும் துரித கதியில் ஜப்பானின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், குறித்த நகரங்களை சுனாமி தாக்கப்போவது முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதனால், புக்ஷிமா எரிசக்தி நிலத்தின் அருகாமையில் வசித்து வந்த 3000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகில் அதில உயிரிழப்புக்களை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்

1976 ஜூலை 27 - சீனா - ரிக்டர் அளவி 7.5 - உயிரிழப்புக்கள் 655,000

2010 ஜனவரி 12 - ஹெய்ட்டி - ரிக்டர் அளவில் 7.0 - உயிரிழப்புக்கள் 222,570

2005 அக். 8 - பாகிஸ்த்தான் ரிக்டர் அளவில் 7.6 - உயிரிழப்புக்கள் 80,361

எனினும் இவை அனைத்தையும் விட, தற்போது ஜப்பானில் தாக்கியுள்ள நிலநடுக்கத்தின் மக்னிடியூட் அளவு (8.9) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.