Thursday, March 03, 2011

ரொபார்ட் ஓ பிளேகின் எச்சரிகை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் வினைதிறன் மிக்க விசாரணைகளை இலங்கை மேற்கொள்ளவில்லை என்றால், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுத்து வரப்படலாம் என அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரொபார்ட் ஓ பிளேகின் எச்சரிகையை குறித்து, இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு தனது விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர், ரொபர்ட் ஓ பிளேக் இலங்கையை போர் குற்றங்களுக்காக குற்றவாளியாக்கியுள்ளார்.

பிளேக்கின் இந்த கடும் எச்சரிக்கை தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் பெட்டீய புட்டினசை அழைத்து, எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளேக்கின் இந்த கடும் எச்சரிக்கை தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் பெட்டீய புட்டினசை அழைத்து, எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.