வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்தின் வெளியக பொறியியல் படைப் பிரிவினர் இதுவரை 3 இலட்சத்து 8ஆயிரத்து900 மிதிவெடிகளை அகற்றி சுமார் 3800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வந்தள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு பொலன்றுவை வவுனியா ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறினார்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் இந்தப் பணியில் பலதரப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகளும் உள்ளூர் நிறுவனங்களும் ஒன்றிணைந்து இராணுவத்தினருக்கு கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலேயே இந்த தரைக் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன.
இப்போது ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி வரை இராணுவத்தினரால் தரைக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மன்னார் கிளிநொச்சி கொக்காவில் மற்றும் முகமாலை தொடக்கம் பரந்தன் வரையிலும் உள்ள பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.