இரு கிபிர் போர் விமானங்கள் நேற்று மோதிக் கொண்டதால் சிறிலங்கா விமானப்படை மோசமான இழப்பை சந்தித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெருமளவு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிபிர் விமானங்களும், அவற்றின் அனுபவம் மிக்க விமானிகளுமே இந்த விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
1996ம் ஆண்டில் சிறிலங்கா விமானப்படையில் கிபிர் விமானங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எந்தவொரு இழப்பையும் சந்திக்கவில்லை.
சிறிலங்கா விமானப்படை ஆரம்பத்தில் 6 கிபிர் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியிருந்தது.
பின்னர் மேலும் 8 கிபிர் விமானங்களும், ஒரு இரு ஆசன பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன.
இந்தப் போர் விமானங்கள் ஒவ்வொன்றினதும் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் டொலராகும்.
இந்த விபத்தினால் சிறிலங்கா விமானப்படைக்கு சுமார் 1000 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விமானப்படையின் 10வது ஸ்குவாட்ரனில் இருந்த கிபிர் போர் விமானங்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து 10 ஆகக் குறைந்து விட்டது.
இந்த அனர்த்தத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணமாக இருக்கக் கூடும் என்று விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இரத்மலானையில் இன்று ஆரம்பமாகும் விமான சாகச நிகழ்வில் 10வது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த விழுந்து நொருங்கிய கிபிர் விமானங்கள் 12வது இலக்க ஸ்குவாட்ரனைச் சேர்ந்த மிக்-29 மற்றும் 5வது இலக்க ஸ்குவாட்ரனைச் சேர்ந்த எவ்-7 விமானங்களுடன் இணைந்து பங்கேற்கவிருந்தன.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம ஐந்து பேர் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
எயர் வைஸ் மார்சல் கபில ஜெயக்கொடி தலைமையில் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விமானியான பிளைட் லெப்டினன்ட் மொனாத் பெரேரா 2004ம் ஆண்டு விமானப்படையில் இணைந்து கொண்டார்.
2005இல் பயிற்சியை முடித்து அதிகாரி நிலை விமானியாக நியமிக்கப்பட்டார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010ம் ஆண்டில் அவர் பிளைட் லெப்டினன்ட்டாக பதவி உயர்த்தப்பட்டார்.
பிளைட் லெப்டினன்ட் மொனாத் பேரெரா முதலில் விமானிகள் பயிற்சிப் பிரிவில் பணியாற்றினார்.
பின்னர் சீனாவின் கே-8 போர் விமானங்களை உள்ளடக்கிய 14வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் விமானியாக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து சீனாவின் எவ்-7 போர் விமானங்களைக் கொண்ட 5வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனுக்கு மாற்றப்பட்டார்.
வன்னியில் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த போது- 2007 ஒக்ரோபர் 12ம் திகதி, 10வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் கிபிர் போர் விமானங்களின் விமானியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் கிபிர் விமானங்களின் மூலம் பெருமளவு வான் தாக்குதல்களை வன்னியில் மேற்கொண்டிருந்தார்.
விமான சாகசப் பயிற்சியின் போது இரண்டு கிபிர் போர் விமானங்களும் 900 கி.மீ வேகத்தில் மிக நெருக்கமாகச் சென்று கொண்டிருந்தன.
திடீரென அவை திரும்பும் போது அவற்றின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இரு கிபிர் விமானங்களும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்றுக் காலை 9.10 மணியளவில் புறப்பட்டிருந்தன.
சிதறி விழுந்த கிபிர் விமானங்களின் பாகங்கள் சுமார் 800 மீற்றர் சுற்றளவுள்ள பகுதிகளில் சிதறிக் கிடந்தன.
இதனால் அந்தப் பகுதிகளில் இருந்த பல வீடுகள் சேதமடைந்ததுடன் ,மரங்கள் முறிந்தும், வயல்கள் கருகியும் காணப்படுகின்றன.
இந்த விபத்தில் உயரிழந்த விமானி பிளைட் லெப்டினன்ட் மொனாத் பெரேராவின் மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நேற்று ஆரம்பமாகியது.
அத்தனகல நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதன்போது பரசூட் விரிந்து கொள்ளாததால் தான் அவர் மரணமானதாக விமானப்படை அதிகாரிகள் சாடசியம் அளித்தனர்.
நெல்லிக்கமுல்லவில் இரு விமானங்களின் சிதைவுகளையும், அன்னாசி மரம் ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த- உயிரிழந்த கொல்லப்பட்ட விமானியின் பரசூட்டையும் அவர் பார்வையிட்டார்.
சம்பவ இடத்தில் இரண்டு தென்னை மரங்களுக்குள் விமானியின் உடல் பாகங்கள் சிக்கியிருந்தன.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு நீதிவான் பணிப்புரை விடுத்தார்.
குண்டு வெடித்தது போன்ற பாரிய சத்தம் ஒன்றையடுத்து வானில் இருந்து நெருப்புக் கோளங்கள் நிலத்தை நோக்கி வருவதைக் கண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
சோமதாச ரணசிங்க என்பவர் கூறுகையில்,
“நானும் எனது மனைவியும் வீட்டின் முன்பாகவுள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்த போது விமானம் ஒன்று எரிந்து கொண்டே வீட்டுக்கு வலப் புறமாக விழுந்தது.
காலை தொடக்கமே விமானங்கள் பலவும் சுற்றிக் கொண்டிருந்தன.
அதனால் ஒரே இரைச்சலாக இருந்தது. தீடீரென பாரிய வெடிச்சத்தம் கேட்டது.
எங்கிருந்து அது வந்ததென்று உடனடியாக நிதானிக்க முடியவில்லை.
பின்னர் அது விமானங்கள் மோதியதால் ஏற்பட்ட சத்தம் என்று உணர்ந்து கொண்டோம்.
உடனடியாக காவல்துறையின் அவசர பிரிவுக்கு அறிவித்தோம்.
சில நிமிடங்கள் கழித்து வானில் இருந்து செம்மஞ்சள் நிற பரசூட் ஒன்று வருவதைக் கண்டோம்.
பின்னர் அது ஒரு தென்னை மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டது.
அதனுள் விமானியின் தலையில்லாத சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.“ என்று கூறினார்.
அதேவேளை, கமலா டி சில்வா என்ற பெண் கூறுகையில்,
“ காலை 9.30 மணியளவில் பாரிய சத்தம் ஒன்று கேட்டது.
அப்போது தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சில நிமிடங்களில் வானத்தில் இருந்து நெருப்புக்கோளங்கள் விழுவது யன்னல் ஊடாகத் தெரிந்தது.
உடனடியாக மின்சாரம் நின்று போனது. என்ன நடந்தது என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளியே ஓடினேன்.
வெளியே சென்ற பின்னர் வீடு எரிந்து கொண்டிருந்தது. அயலவர்கள் எதிர்ப்பக்கமாக ஓடிக் கொண்டிருந்தனர்.“ என்று கூறியுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.