மனிதாபிமான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்ட யுத்த வெற்றியினை தான் ஒருபோதும் காட்டிக்கொடுக்க தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.இலங்கை விமானப் படையின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நாட்டின் சரித்திரத்தில் விமானப்படையினர் பாரிய கடமையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 4 விமானங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விமானப்படை இன்று புதிய ரக ஆயதங்களுடன் கூற முடியாதளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெற்ற யுத்த முன்னகர்வின் போது விமானப்படையினரின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு இடம்பெற்றிருந்தால் நாட்டின் வரலாறு வேறொரு விதமாக எழுதப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.