Thursday, March 17, 2011

வாக்களிக்கவேண்டும் அல்லது மடிக்கணணிகளை திருப்பித் தரவேண்டும்: வாக்காளர்களை மிரட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்.

இன்று திருகோணமலை வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்ற தமிழ் மக்களை வெள்ளை வானில் வந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரக்காந்தின் கட்சி உறுப்பினர்கள் தடுத்த போது அவர்களில் நால்வரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த வெள்ளைவானுக்கு பின்னால் சென்ற முதலமைச்சர் பிள்ளையான் பொதுமக்களுடன் தனது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபடுவதை அவதானித்துள்ளார்.

பிள்ளையான் உடனே திரும்பிச் சென்றுவிட்டு சற்று நேரத்திற்கு பின் அங்கு மீண்டும் சென்று பொதுமக்களிடம் தனது கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் நேற்றைய தினம் தன்னால் வழங்கப்பட்ட கணினிகளை திரும்ப ஒப்படைக்குமாறு அம் மக்களைப் பார்த்து எச்சரித்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.