அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரண்டு குளங்கள் அதிகளவான வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்துள்ளதுடன், வீடுகளும் மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அநுராதபுர மாவட்டத்தின் கெபிதிகொல்லாவ பிரதேசத்திலுள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்ததில் ஐம்பத்தி ஐயாயிரம் ஏக்கர் கன அடி நீர் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தென்னை மரங்கள் கூட நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வெள்ளத்தின் மத்தியில் தற்போதைக்கு சுமார் நானூறு பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர் எனவும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
அதற்கடுத்ததாக திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தை அண்மித்த ஆரியமங்கேணி குளத்தின் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதால் அப்பிரதேசமும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. அதற்கு முன்பே அப்பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக அப்பிரதேசத்தை அண்டிய மூதூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது ஆரியமங்கேணி குளத்தின் வெள்ள நீரும் மூதூரை அண்மித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் காரணமாக மூதூர் நகரம் முற்றாக நீரில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.