Sunday, February 06, 2011

பி.பி.ஸி தொகுப்பாளருக்கு 11 மில்லியன் பவுண்!

பி.பி.ஸி யில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துவதில் முன்னணி வகிக்கும் அலன் டிச்மார்ஷ் ஐடிவி நிலையத்துடன் 11 மில்லியன் பவுண் பெறுமதியான உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளார்.

பிபிஸி யில் அவர் நடத்திய கார்டனர்ஸ் வேர்ள்ட் நிகழ்ச்சிக்குப் போட்டியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தவே இந்த ஒப்பந்தம் செய்ய்பட்டுள்ளது.

பிபிஸி யில் ஆறு வருடங்களாக இவர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். பிபிஸி யில் ஆகக் கூடுதலாக உழைக்கும் தொகுப்பாளர் இவரே என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.

தற்போதைய ஒப்பந்தம் இரண்டாண்டுகளுக்கானது. பிபிஸி யில் வெள்ளிக்கிழமை இரவுகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு சமமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

இதன் மூலம் இரு நிகழ்ச்சிகளுக்கும் இடையில் தர வரிசைப் போட்டியும் ஏற்படவுள்ளது. ஏனைய தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் தற்போது இந்த நிகழ்ச்சி நேரத்தில் போட்டியிடக்கூடிய நிகழ்ச்சிகளையும், அதை நடத்தக் கூடியவர்களையும் தேடி வருகின்றனர்.

யோர்க்ஷயரைச் சேர்ந்த அலன் இந்தப் பிரதான நிகழ்ச்சிபோக இன்னும் சில முக்கிய நேர நிகழ்ச்சிகளையும் வழங்கவுள்ளார். அவற்றுள் பிரபலமான பகல் நேர நிகழ்ச்சியும் அடங்கும். அலென் 5 மில்லியன் பவுண்களை பெற்றுக் கொள்வார்.

மீதித் தொகை தயாரிப்புக் கம்பனியான ஸ்பன்கோல்ட் நிறுவனத்துக்குக் கிடைக்கும். இந்தத் தொகை போக வர்த்தக ரீதியாக இன்னும் பல மில்லியன் பவுண்கள் அவருக்குக் கிடைக்கும்.

மக்களுக்குத் தேவையான நம்பத் தகுந்த தகவல்களை மிகத் தெளிவான முறையில் வழங்குவதே தனது வெற்றிக்குக் காரணம் என்கிறார் 61 வயதான அலன்.

இவர் தோட்டக்கலையை பெரிதும் நேசிப்பவர். தோட்டக்கலை பற்றிய தகவல்களை ஐடிவி மூலம் வெளிக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

தோட்டக் கலை பிரிட்டனில் மிகப் பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகும். அலென் தனது தயாரிப்பாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பணத்தை ஈட்டிக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பப் படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.