இலங்கையின் வட மாகாண கடலுக்குள் அத்துமீறி பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதுவர் வி. மகாலிங்கம் தேவை இல்லாமல் மூக்கு நுழைத்து இருக்கின்றார் என்று இந்தியாவுக்கு பலத்த அதிருப்தியை தெரிவித்து உள்ளது இலங்கை அரசு.
இந்திய தூதுவர் அசோக் காந்தாவுடன் கடந்த புதன்கிழமை இரவு ஒன்றாக இராப் போசன விருந்து சாப்பிட்டார் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.
அப்போதே இவ்வதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
முதலில் இந்திய மீனவர்கள் 112 பேர் பருத்தித்துறைக் கடலில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இவர்களை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று பருத்தித்துறை நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் இவ்விளக்கமறியல் உத்தரவை நீதிவான் பிறப்பிக்கின்றமைக்கு முன்பாக நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று இருந்தார் துணைத் தூதுவர் மகாலிங்கம்.
இந்திய மீனவர்களை விளக்கமறியலில் போடக் கூடாது என்றும், மீறி விளக்கமறியலில் போடும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டு விடும் என்றும் மகாலிங்கம் குரலை எழுப்பிக் கூறி இருக்கின்றார்.
மறுநாள் இன்னொரு தொகை மீனவர்கள் மாதகல் கடலில் வைத்து பிடிக்கப்பட்டனர்.
இருப்பினும் அரச மேலிட அறிவுறுத்தலுக்கமைய வடமராட்சி கடல், மாதகல் கடல் ஆகியவற்றில் வைத்து பிடிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டார்கள்.
வடமராட்சிக் கடலில் பிடிபட்ட இந்திய மீனவர்களின் விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்தபோது நீதிவான் நநதசேகரன் நீதிமன்ற செயல்பாட்டில் துணைத் தூதுவர் மகாலிங்கம் மிகவும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டார் என்று சுட்டிக் காட்டி இருந்தார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.