இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசிடம் இந்தியா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
1987ல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை இலங்கை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகிறது.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை இறுதித் தீர்வாக 1987ம் ஆண்டின் அமைதி உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.
அமைதி உடன்பாட்டில் உள்ளது போன்று மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கேட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடிப்பதற்கு இலங்கைக்கு புதுடெல்லி உதவி வழங்கியதன் அடிப்படையில், அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது.
அதேவேளை இருநாடுகளுக்கும் இடையிலான அடுத்த பேச்சுக்களின் போது இந்த அழுத்தங்களுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.