தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அரசாங்கம் கூறுவதுபோல் முடிவடையவில்லை. அது உலக நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் தலை மகனுமான வே. பிரபாகரனின் செயலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை துருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாகவோ, ஒதுக்கப்பட்டதாகவோ இலங்கை அரசாங்கமும் அதனோடு இணைந்தவர்களும் கூறிக்கொள்வது பகல்க் கனவு காண்பதைப் போலாகும். கடந்த சில வாரங்கள் குடாநாட்டில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.
இதனைக் காரணங்காட்டி வீதிக்கு வீதி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததாகக் கூறும் அரசாங்கம் தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதி நிகழ்வின்போது கலந்து கொள்பவர்களுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது. 81வயதுடையவரின் மரணச்சடங்கு கூட அவர்களுக்கு புளியைக் கரைத்துள்ளது. தமிழ் மக்களது போராட்டம் முடிந்துவிடவில்லை.
எந்த அரசாங்கம் வந்தாலும் அடக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் பகுதியிலுமிருந்து கிளர்ச்சி ஏற்படும். தலைவர் பிரபாகரனின் தாயாரது இறுதி அஞ்சலி நடைபெறும் இடமானது வீரம் செறிந்த மண். தலைவரின் தாய் தந்தையர்கள் அமரர்கள் வேலுப்பிள்ளை, பார்வதியம்மா ஆகியோரின் மூச்சு இந்தக் காற்றில் கலந்துள்ளது. பல மாற்றங்களை உருவாக்கிய இம் மண் அடுத்தக் கட்ட போராட்டத்தின் கால்கோளாக இது இருக்கும் எனத் தெரிவித்தார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.