தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் 3 நாய்களைச் சுட்டுச் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் இலங்கை இராணுமும் துணை ஆயுதக் குழுக்களும். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாகவது:-
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பர்வதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு ஆயுதம் தரித்த சிலர் வந்ததாகவும், அவர்கள் வந்த ஜீப் வண்டியின் சத்தம் கேட்டதால் அருகில் இருந்த சில நாய் குரைத்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர். உடலம் எரிந்து சாம்பலாகிக் கிடந்த இடத்தில் மரக்கட்டையைக் கொண்டு அவர்கள் கிளறியுள்ளனர். அதனை வேண்டும் என்றே அலங்கோலப்படுத்தியுள்ளனர்.
ஆயுதாரிகளின் வருகையை அறிந்த சில நாய்கள் கூடி நின்று குரைத்துள்ளன. இந்த நாய்களுக்கு இருக்கும் நன்றியும் பண்பும் கூட இலங்கைப் படையினருக்கும் துணை ஆயுதக் குழுக்களுக்கும் இல்லை. இதேவேளை அங்கே குரைத்துக்கொண்டு நின்ற மூன்று நாய்கள் மீது ஆயுதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சுமார் 8 தடவை துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்த நாய்களை பார்வதி அம்மாளைத் தகனம் செய்த இடத்தில் போட்டுவிட்டு ஆயுததாரிகள், ஜீப் வண்டியில் ஏறிச்சென்றுவிட்டதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.
நேற்றைய தினம் நடந்த பார்வதி அம்மாளின் இறுதிக்கிரிகைகளில், இராணுவத்தினரும், அரசும் சற்றும் எதிர்பார்க்காத சில விடையங்கள் நடந்ததால் அரசு ஆத்திரமுற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த அரசியல் தலைவர்களைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசு, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு இருந்தது ஆனால் நடந்ததோ தலைகீழ். அதாவது பார்வதி அம்மாளின் இறுதிக்கிரிகையின்போது, தமிழ் நாட்டில் இருந்து, வைகோ, ஜயா நெடுமாறன், மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவைப் பிரதிநிதி எனப் பல பிரமுகர்கள் தொலைபேசி மூலம் உரையாற்ற அந்த உரை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பானது.
அத்தோடு முந் நாள் நாடாழுமன்ற உறுப்பினர் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களும் கரசாரமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இதனால் அரசு கடும் அதிருப்த்தி அடைந்துள்ளது என அறியப்படுகிறது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.