இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங் கம் தீவிர கண்காணிப்பு ஒன்றை மேற் கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபியாவில் நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத் துழைப்பதாக இல்லை.அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக்கூடிய வெளி நாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அதன் காரணமாக அவ்வாறான பணிகளில் ஈடுபட்டு அனுபவம் வாய்ந்தவர்கள் என்ற வகையிலும் லிபியாவின் நட்பு நாடு என்ற வகையிலும் இலங்கை விமானிகள் அங்கு அனுப்பப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.அவ்வாறு லிபிய உள்நாட்டுக்கலகத்தை அடக்க இலங்கை விமானிகள் அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசாங்கம் முன் கூட்டிய ஆயத்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.