தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மாத்திரம் தான் அதிகாரப் பரவலாக்கல் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று இதுவரை கூறி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது அதனைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.தமிழ்க்கட்சிகள் ஆளுக்கொரு பக்கம் நின்ற காலங்களில் அவை ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படமாட்டாது என்று நம்பிக் கொண்டிருந்த ஜனாதிபதி, அதிகாரப் பகிர்வு விடயங்களை இழுத்தடிப்பதற்காக அவற்றை ஒற்றுமைப்படுமாறு கூறி வந்தார்.
அவ்வாறு ஒற்றுமைப்பட்டு ஒருமித்த குரலில் கருத்துக்களை முன் வைத்தால் மட்டுமே அதிகாரப் பரவலாக்கல் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அவ்வாறின்றி ஆளுக்கொரு கருத்தை முன் வைத்தால் அது சாத்தியப்படாது என்றும் ஜனாதிபதி கடுமையான தொனியில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி நின்ற கட்சிகளும் அதனுடன் இணைந்து கொண்டு, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களிலும் ஒன்றாகப் போட்டியிடுகின்றன.
அதனைக் கண்ட ஜனாதிபதிக்கு தற்போது கிலி பிடித்துள்ளது. அதன் காரணமாக அவர் தற்போது பிளேட்டை மாற்றிப் பேசத் தொடங்கி விட்டார்.
அதிகாரப் பரவலாக்கல் விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் அதே நேரம், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடனும் தனித்தனியாகப் பேசப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் அதிகாரப் பரவலாக்கல் விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன் வந்த பின் அவர்களுடனும் தனித்தனியாக பேச வேண்டுமென ஜனாதிபதி கூறி வருவது மீண்டும் காலத்தை இழுத்தடிக்கும் ஒரு நடவடிக்கையே அன்றி வேறில்லை என்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.