எகிப்து ஜனாதிபதி முபாரக்கை மக்கள் விரட்டி அடித்தது போல் இலங்கை அரசாங்கத்தை விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.இப்றாகீம் தலைமையில் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சோமவன்ஸ அமரசிங்க
"எகிப்தில் நடந்தது போல இலங்கையிலும் மிக விரைவில் நடக்கும். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக எவரும் கூறமுடியாது.
மக்கள் விடுதலை முன்னணியிடம் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை வழங்கினால் நேர்மையாகவும் நீதியாகவும் செய்து காட்டுவோம்.
இந்த ஆட்சியை மாற்றி நேர்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.