சிறீலங்காவில் தற்போது அரச பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறைகள் என்பன தலைவிரித்தாடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்று கட்டுநாயக்கவில் நடைபெற்ற மறைந்த விஜய குமாரதுங்கவின் நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நானும் விஜய குமாரதுங்கவும் அன்று தொடக்கம் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்தை மட்டுமன்றி அரச பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம்.
இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றி விஜய கண்ணுற்றிருப்பாராக இருந்தால் அவர் பெரிதும் மனம் வருந்தியிருப்பார். அந்தளவுக்கு அரச அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நானும் என் கணவரும் இந்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட பல செயற்திட்டங்கள் இன்று தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.