தன்னை விடவும் குமரன் பத்மநாதனுக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது தாமும் அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளித்ததாகவும், தம்மை விடவும் குமரன் பத்மநாதனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டமை துரதிஸ்டவசமான சம்பவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனை அரசாங்கம் வேண்டுமானால் நம்பக் கூடும் எனினும் தமக்கு நம்பிக்கை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலியை நீராட்டினாலும் அது இறைச்சியைத் தான் உணவாக உட்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஒருபோதும் அரசாங்கத்திடம்; கோரிக்கை விடுக்கவில்லை எனவும், அரசாங்கமாகவே தமக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்றக் காலத்தில் தமது பாதுகாப்பிற்காக 76 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.