Wednesday, February 16, 2011

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் 8பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் -சுவிஸ் பொலிஸ்

இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும், அவர்களோடு சேர்ந்து இயங்கும் சில குழுக்களும் சுவிஸில் உள்ள சில பொது மக்களைத் தூண்டி, தமிழீழ செயல்பாட்டாளர்கள் மீது வழக்குகளைப் போடவைத்தது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் சுவிஸில் சுமார் 10 செயல்பாட்டாளர்களை சுவிஸ் பொலிசார் கைதுசெய்தனர். புலிகளுக்கு காசு சேர்த்ததாக அவர்கள் மீது வழக்கும் தொடுத்து இருந்தனர். ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் இம் மாத ஆரம்பப் பகுதியில் விடுவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது நேற்றைய தினம் மேலும் ஒரு நபர் விடுவிக்கப்படுள்ளார்.

இதனை அடுத்து சுவிஸ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 10பேரில் 8பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலியான புகார்களின் பேரில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தற்போது பொலிசார் ஒப்புக்கொள்கின்றனர். அத்தோடு அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய சாட்சிகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசோ சுவிஸில் கைதுசெய்யப்பட்ட 10 செயல்பாட்டாளர்களால் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நல்ல அடி விழுந்துள்ளதாகத் தெரிவித்து ஆனந்தக் கூத்தாடியது..

ஆனால் தற்போது கிடைக்கும் செய்திகள் இலங்கை அரசுக்கு மீண்டும் முகத்தில் கரிபூசும் செயலாகவே அமைந்துள்ளது. அத்தோடு புலம்பெயர் மக்கள் மனதில் ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழீழ செயல்பாட்டாளர்களை முடக்கவும் இலங்கை அரசு பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அவையாவும் பலன் அளிக்காமல் போயுள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். சுவிஸ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு தற்போது விடுதலைசெய்யப்பட்டுள்ளவர்களைப் பார்க்கும்போது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் உச்சாகம் ஏற்பட்டுள்ளதை அறியமுடிவதாக சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.