சிறிலங்காவின் வடபகுதிக் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்த, மேலும் 26 இந்திய மீனவர்கள், சுற்றிவளைக்கப்பட்டு மாதகல் கடற்கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக
கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று புதன்கிழமை இரவு இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும். இலங்கை மீனவர்களே இந்தச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளதாகவும், இதன்போது எழுபடகுகளில் வந்த 26 மீனவர்களே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கடற்பரப்பில் நேற்று 106 இந்திய மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 26 பேர் சுற்றி வளைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்ட மீனவர்கள், பருத்தித்துறை நீதிபதியின் பணிப்பின் பேரில் , வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மீனவர் பிரச்சனை தொடர்பில், என்றுமில்லாதவாறு திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில், மேலும் 26 மீனவர்கள் இன்று சுற்றி வளைக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழக மீனவர்கள் சங்க உறுப்பினர்கள் உண்மைநிலையை வெளிப்படுத்தாவிடின், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் வீண் குழப்பங்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறிலங்கா அரசின் கடல்வலயப் பாதுகாப்புக்கள் உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய நிலையிலிருந்து ஈழத்தமிழ் மீனவர்கள் மெல்ல மீண்டுவரும் நிலையில், தமிழக அரசியல் சூழல்களுக்காக, ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் வகையில் மீனவர் பிரச்சனையில், இவ்வாறான நிலைகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றனவா எனவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.