Sunday, February 06, 2011

இரணைமடுக்குளம் நீர்நிலை 34 அடிக்கு உயரும் அபாயம்

வன்னியில் கடும் மழை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரணைமடுக்குளத்து நீர் 34அடிக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது 32 அடி 6 அங்குலத்தில் தண்ணீர் உயர்ந்துள்ளது.
மாங்குளம் கனகராயன்குளம் போன்ற குளங்களின் நீர் கனகராயன் ஆற்றினால் வருவதைத் தொடர்ந்து நீர்நிலை அதிகரித்து வருவதாக கிளிநொச்சி இரணைமடு நீர்பாசன திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குளத்தின் வான்கதவுகள் யாவும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் கடும் வேகத்துடன் பெருவழி ஊடாக வெளியேறி வருகிறது. இதனால் மருதநகர் பன்னங்கண்டி போன்ற இடங்களில் உள்ள பல மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். பாடசாலைகளில் இந்த மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

மழை தொடருமாக இருந்தால் குளத்தின் நீர் 34 அடிக்கு உயரும் என்றும் அதனைத் தொடர்ந்து வான் மேவிப் பாயும் என்றும் நீர்பாசனத் திணைக்கள அதிகாரி குறிப்பட்டார். அதனால் பல மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் காலநிலை அச்சம் தரும் வகையில் உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.