Sunday, February 06, 2011

தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளை மழுங்கடிக்கவே ஸ்ரீ ரங்காவின் கட்சி வடக்கில் களமிறக்கப்பட்டுள்ளது?

ஸ்ரீரங்காவின் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, அவரை வடக்கின் முக்கிய அரசியல் தலைவராக முன்னுக் கொண்டு வருவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் பிரச்சாரங்களுக்கு ரங்காவைப் முன்னிறுத்த முடியும்.

மேலும், அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளை மழுங்கடிக்கவும் முடியும். இவ்வாறானா நோக்கங்களாலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தலில் ஸ்ரீ ரங்காவின் கட்சியை முல்லைத்தீவில் போட்டியிடச்செய்துள்ள தாக ஜனாதிபதி செயலக வட்டாரத்திலிருந்து தெரிய வருகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் வெற்றிலைச் சின்னத்துக்குப் பதிலாக ஸ்ரீ ரங்காவின் பிரசைகள் முன்னணி கட்சியின் பஸ் சின்னத்தில் போட்டியிட ஆளுங்கட்சி தீர்மானித்திருந்தது.

அதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கின் அரசியல் தலைமைக்கு ஸ்ரீரங்காவை வளர்த்தெடுக்க ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். வடக்கில் அவரது கட்சி பெறும் செல்வாக்கை வைத்து அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளை மழுங்கடிப்பது அதன் உள்நோக்கமாகும்.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏனைய அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஸ்ரீரங்கா மூலம் மறுத்துரைக்க முடியும் என்பது ஜனாதிபதியின் நம்பிக்கையாகும்.

அதற்கு வலுச் சோ்க்கும் விடயமாக அவரது கட்சிக்குக் கிடைக்கும் வாக்குள் மற்றும் பிரதிநிதித்துவங்களை சுட்டிக்காட்ட ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

அது மாத்திரமன்றி ஸ்ரீரங்காவின் கட்சிக்கு கிடைக்கும் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, அவரை வடக்கின் முக்கிய அரசியல் தலைவராக முன்னுக் கொண்டு வருவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் பிரச்சாரங்களுக்கு ரங்காவைப் முன்னிறுத்த முடியும் என்பதுடன்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக சர்வதேச மட்டத்தில் அவரது கட்சியை முன்னிலைப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.