Sunday, February 27, 2011

பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற லிபிய ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானம்:

லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சுட்டுக் கொன்றமைக்காக அந்நாட்டு ஜனாதிபதி முகம்மர் அல் கதாபியைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டுமென் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். மேலும், லிபிய கடாபி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் அமெரிக்காவில் சொந்தமாக உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்த நிலையிலேயே ஐ.நர் பாதுகாப்பச் சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு அமெரிக்காவில் சொந்தமாக உள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவின் உத்தரவின் பேரிலேயே இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன', என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, லிபியா மீது ஒருமுகமான தடைகளை விதிப்பதாக ஒபாமா நேற்று அறிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாக லிபியாவின் உள்நாட்டுச் சூழலும் கலவரமும் அமைந்திருப்பதால் இந்தத் தடையை விதித்துள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

மேலும் லிபியாவிலுள்ள அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.