Tuesday, February 15, 2011

150 படையினரின் உயிரைப் பணயம் வைத்து விமல் வீரவங்ச அவரது மகனுக்கு விமானம் ஓட்டக் கற்றுக்கொடுத்துள்ளார்

150 பாதுகாப்பு படையினருடன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானத்தில், பாதுகாப்பு படையினருடன் பயணித்த அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் அவரது மகனுக்கும் விமானம் ஓட்டுவதற்கான அடிப்படைப் பயிற்சிகளை விமானிகள் வழங்கியதாக விமானப்படை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மகனுக்கு விமானம் ஓட்டும் ஆசை இருப்பதாக கூறி, விமானிகள் இருக்கும் இடத்திற்கு தனது மகனை அழைத்துச் சென்று, அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளிடம் அமைச்சர் வீரவங்ச கேட்டுள்ளார்
வீரவங்சவின் அழுத்தங்களைத் தவிர்க்க முடியாத விமானிகள், தமக்கு அருகில் ஆசனம் ஒன்றை போட்டு, வீரவங்சவுக்கும் அவரது மகனுக்கு விமானத்தை செலுத்துவது பற்றிய அடிப்படை பயிற்சிகளை வழங்கியுள்ளனர்

இரண்டு முறை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் பயணித்துள்ளனர் இந்த பயிற்சி தொடர்பில் குழப்பமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச இது குறித்து அமைச்சர் வீரவங்சவிடம் தெரிவித்ததை தொடர;ந்தும், அவரும் அவரது மகனும் விமானிகள் அறையில் இருந்து வெளியேறியுள்ளனர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.