யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் பிரதேச மீனவர்களின் வலைகள் உட்பட கடற்றொழில் உபகரணங்களை சேதப்படுத்திய இந்திய தமிழக மீனவர்கள் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இன்று மதியம் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பிரதேச மீனவர்கள் பொலிஸ் மற்றும் கடற்படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடற்படை, பொலிஸ் மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மாலை7.00 மணி வரைக்கும் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தொண்டைமானாறு தொடக்கம் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் வைத்து 108 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பயன்படுத்திய 18 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம், காரைக்கால் பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களனைவரும் தற்போது பருத்தித்துறை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.