Monday, February 14, 2011

இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கத் தயாராகிறது இந்திய அரசு!

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது என்று இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் கட்சிகளினால் இலங்கைத் தமிழர் தொடர்பில் மத்திய அரசிற்கு பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
முதலில் அரசுடன் பேச்சு நடத்தவும், பின்னர் சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சு நடத்தவும் இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய இனப்பிரச்சினைக்கான வரைவுத் திட்ட தீர்வு ஒன்றை இந்தியா விரைவில் முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இறுதித் தீர்வுத் திட்ட யோசனை தயாரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசின் கருத்துகள் கோரப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட உள்ளது எனத் தெரிய வருகிறது.

1 comment:

  1. இவர்கள் தீர்வுத்திட்டம் தமிழருக்கு ஏதாவது நன்மை புரியும் என்று எதிர்பார்த்தால் தமிழர் நாம் முழு மூடர்கள் ஆவோம். தமது தேர்தல் நலனுக்காக தமிழக தமிழர்களை ஏமாற்ற ஈழத்தமிழர் பிணங்களின மேல்நின்று ஆட்டம் போட ஆயத்தமாகிறது இந்தியா என்னும் நாசகார நாடு. இவர்களின் திட்டங்களை சிங்கள கொலைவெறி முதலில் ஏற்றுக் கொள்ளுமா? சிங்கள இன வெறி கொலைவெறியருடன் சேர்ந்து எம்மை அழித்து அநாதைகள் ஆக்கி எமத இருப்புகளையே இல்லதொழித்த இந்த நாசகார நாடு ஏதும் எமக்கு நன்மையானதோரு தீர்ப்பு வழங்குமா? இதுவும் ஈழத்தமிழரின் மீது தமது பேரினக் கொள்கைகளை வல்லரசுக் கொள்கைகளை திணிக்கும் ஒரு திட்டமாகவே இருக்கும். போரினால் எம்மை கொன்றொழித்தார்கள். மிச்சம் மீதி இருக்கும் எம்மை கொலைவெறி அரசுக்குச் சார்பான ஒரு தீர்வுத் திட்டத்தை தீட்டி முற்றாக எம்மை முடக்கவும் அழிக்கவுமே இது உதவும்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.