வவுனியா நாவற்குளத்தில் சிறிலங்காப் படையினர் முன்நகர முற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர்.
ஓமந்தைக்கு மேற்காக உள்ள நாவற்குளம், நெல்லிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிமுதல் எறிகணை, பல்குழல் வெடிகணைகளின் செறிவான சூட்டாதரவோடு படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர்.
முன்நகர முற்பட்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
இதில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்களுடன் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளால் படைத்தரப்பினர் கைவிட்டுச் சென்ற ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.