சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர்.
கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.
கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.