Monday, May 14, 2007

வர்த்தகர்களிடம் கப்பம் வேண்டும் ஒட்டுக்குழுவினர்.

[திங்கட்கிழமை, 14 மே 2007] யாழ் குடாநாட்டில் படையினருடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினராலும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடமும் தொலைபேசிமூலமாக கப்பம் கோரும் செயற்பாடுகள் அதிகரித்து உள்ளதாகவும் உயிர்அச்சம் காரணமாக ஈ.பி.டி.பியினர் கேட்டுவரும் பணத்தை வர்த்தகர்கள் மக்கள் தயக்கத்துடன் கொடுத்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் குடாநாட்டில் தினமுரசு என்ற ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் மக்கள் விரோத பிரசுரத்தை விற்பனைசெய்ய வரும் ஒட்டுக்குழுவினர் வர்த்தகநிலையங்களில் வேலை செய்வோரிடம் வர்த்தக நிலைய உரிமையாளரின் தொலைபேசி இலக்கங்களைதரும்படி அச்சுறுத்திவருவதாகவும் தொலைபேசி இலக்கங்கள் பெற்றுச் செல்லும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினர் கப்பம் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.