[திங்கட்கிழமை, 14 மே 2007]
விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வன்னியில் நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இவற்றில் அதிகமானவை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன . இதனால் கிளிநொச்சி உட்பட வடபகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது ;
மே மாதத்தின் முதல் வாரத்தில் விமானப்படையால் வன்னியில் எட்டு விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னரங்க பகுதிகளினூடாக படையினர் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு வடகிழக்கு கடற்பகுதியில் கடற்சமரொன்றும் இடம்பெற்றுள்ளது. மன்னார், மடு மேற்கு மற்றும் வவுனியா,ஓமந்தை மேற்கு முன்னரங்க பகுதிகளினூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி முன்னேறும் படை நடவடிக்கையை படையினர் மேற்கொண்டனர்.
இதனால் முன்னரங்க பகுதிகளில் கடும் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்கள் இரு தரப்பினராலும் பரஸ்பரம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Monday, May 14, 2007
விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வன்னியில் நாளாந்த நிகழ்வாகிவிட்டது இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு
Monday, May 14, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.