[திங்கட்கிழமை, 14 மே 2007] மிருசுவில் ஏ-9 பிரதான வீதிக்கு சமீபத்திலும் மிருசுவில் பழைய புகையிரத நிலையத்திற்கு பின்னால் மூன்று வீடுகளில் இயங்கிவரும் மினி இராணுவ வைத்தியசாலைக்கு கடந்த இரண்டு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட படைஊர்திகள் பெருமளவிலான மருத்துவ உபகரணங்கள், மருந்து வகைகள், கொண்டுவரப்பட்டு இருப்பதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மற்றும் இப்படை வைத்தியசாலையில் பத்திற்கு மேற்ப்பட்ட நோயாளர் காவுவண்டிகள் தயார் நிலையில் காணப்படுவதாகவும் படையினரின் முன்னரங்க நிலைகளில் காயம் அடையும் கொல்லப்படும் படையினரை முதலில் இம்மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவர். பின்னரே பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன படையினர் படைநகர்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடனேயே தயார்படுத்தலை மேற்கொண்டு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
Monday, May 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.