[வெள்ளிக்கிழமை, 4 மே 2007,] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது: இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குச் சென்று பேச்சுக்கள் நடத்தும் இரண்டாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் புலிகளின் பேச்சுக்குழுத் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமது கருத்துகளை விளக்க அழைக்க ஒப்புக் கொண்டுள்ளோம். மூன்றாவது லண்டனில் எதிர்வரும் யூலை மாதத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் உச்சி மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பிரித்தானிய தடை எவ்வளவு விரைவில் நீக்கப்படுமோ அவ்வளவு விரைவில் நீக்கப்படும். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
Friday, May 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.